Search a song (Type in tamil for better results)

Monday, March 30, 2020

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் - Enakothaasai varum parvatham nerai

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் - Enakothaasai varum parvatham nerai
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் 

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே 

என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே

வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் 

Enakothaasai varum parvatham nerai
En kangalai Yereduppen

Vaanamum boomiyum padaitha
Valla devanidamirunthu
Ennukkadangaa nanmaigal varume
En kangal yereduppen

Malaigal peyarnthagantidinum
Nilai maari puvi agantodinum
Maaridumo avar kirubai ennaalum
Aaruthal enakkavare

En kaalai thallaada vottaar
Ennai kaakkum devan urangaar
Isravelai kaakkum nal devan
Raappagal urangaare

Valappakkathil nizhal avare
Vazhuvaamal kaappavar avare
Sooriyan pagalil santhiran iravil 
Sethappaduthaathe

Eth theengum ennai anugaamal
Aathumaavai kaakkum en devan
Pokkaiyum varathaiyum pathiramaaga
Kaappaare ithumuthalaai

No comments:

Post a Comment