Search a song (Type in tamil for better results)

Friday, December 6, 2019

நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் - Naan aaraathikkum devan Jeevanullavar

நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவன் உள்ளவர் - 
Naan aaraathikkum devan Jeevanullavar
நாங்கள் ஆராதிக்கும் தேவன் 
ஜீவன் உள்ளவர் (3)
அவர் நேற்றும் இன்றும் என்றும் 
மாறாதவர் (3)

அவர் ஒரு வார்த்தை சொன்னால் 
காற்றடங்கும் (3)
அவர் மறு வார்த்தை சொன்னால் 
கடலடங்கும் (3)
மனுஷனால் கூடாதது 
என் தேவனால் கூடுமே 

அவர் பாடையை தொட்டால் 
உயிர் பிழைக்கும்(3)
அவர் ஆடையை தொட்டால் 
சுகம் கிடைக்கும்(3)
மனுஷனால் கூடாதது 
என் தேவனால் கூடுமே 

அவர் அனுதினம் செய்வார் 
அதிசயங்கள்(3)
நீ அவரிடம் வந்தால் நீங்கிவிடும் 
உன் பயங்கள்(3)
மனுஷனால் கூடாதது 
என் தேவனால் கூடுமே 

 Naangal aaraathikkum devan 
jeevanullavar(3)
avar netrum intrum entrum 
Maaraathavar(3)

Avar oru vaarthai sonnaal 
Kaatradangum(3)
Avar maruvaarthai sonnaal 
Kadaladangum(3)
Manusharaal koodaathathu
En devanaal koodume

Avar paadaiyai thottaal 
Uyir pizhaikkum(3)
Avar aadaiyai thottaal 
Sugam kidaikkum(3)
Manusharaal koodaathathu
En devanaal koodume

Avar anuthinam seivaar 
Athisayangal(3)
Nee avaridam vanthaal neengividum
Un bayangal(3)
Manusharaal koodaathathu
En devanaal koodume

Friday, November 1, 2019

என் மீது அன்புகூர்ந்து பலியானீர் - En meethu anbu koornthu Baliyaaneer

என் மீது அன்புகூர்ந்து பலியானீர் En meethu anbu koornthu Baliyaaneer
என் மீது அன்புகூர்ந்து 
பலியானீர் சிலுவையிலே 
எனக்காய் இரத்தம் சிந்தி 
கழுவினீர் குற்றம் நீங்க 
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் 
உமக்கென்று வாழ்ந்திட 
ஆராதனை உமக்கே 
அனுதினமும் உமக்கே 

பிதாவான என் தேவனே 
தகப்பனே என் தந்தையே 
மாட்சிமையும் மகத்துவமும் 
உமக்குத்தானே என்றென்றைக்கும் 
வல்லமையும் மகிமையும் 
தகப்பனே உமக்குத்தானே 

உம் இரத்தத்தால் பிதாவோடு 
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் 
கறைபடாத மகனாக 
நிறுத்தி தினம் பார்க்கின்றீர் 
வல்லமையும் மகிமையும் 
தகப்பனே உமக்குத்தானே 

மாம்சமான திரையை அன்று 
கிழித்து புது வழி திறந்தீர் 
மகாமகா பரிசுத்தம் உம் 
திருச்சமுகம் நுழைய செய்தீர் 
வல்லமையும் மகிமையும் 
தகப்பனே உமக்குத்தானே 

En meethu anbu koornthu
Baliyaaneer siluvayile
enakkaai Ratham sinthi
Kazhuvineer kutram neenga
Piriththedutheer piRakkumunnaal
umakentru vaazhnthida

Aaraathanai umakke
Anuthinamum umakke

Pithaavaana En devane
thagappane en thanthaiye
Maatchimaiyum magathuvamum
umakku thaane entrentraikkum
Vallamaiyum magmaiyum
Umakku thaane entrentraikkum

Um rathaththaal pithaavodu
Oppuravaagi magizha cheitheer
karai padaatha maganaaga 
Niruththi thinam paarkintreer
Vallamaiyum magmaiyum
Umakku thaane entrentraikkum

Maamsamaana thiraiyai antru
Kizhiththu puthu vazhi thirantheer
Magaa magaa parisutham um
thiru chamugam nuzhaiya seitheer
Vallamaiyum magmaiyum
Umakku thaane entrentraikkum 

Saturday, September 28, 2019

மரணமோ ஜீவனோ நிகழ் காரியமோ - Maranamo jeevano nigal kaariyamo

மரணமோ ஜீவனோ நிகழ் காரியமோ - Maranamo jeevano nigal kaariyamo
மரணமோ ஜீவனோ நிகழ் காரியமோ 
மரணமோ ஜீவனோ வரும் காரியமோ 
எதுவுமே உம் அன்பை விட்டு 
பிரித்திடாது என்னை - (2)

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் 
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 
ஆவியோடு உண்மையோடு ஆராதிப்பேன் 

எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர் 
என் பாவ பாரம் எல்லாம் நீர் சுமந்தீர் - (2)
உருவற்ற என்னையும் நீர் உருவாக்கினீர் - (2) 
பயனுள்ள பாண்டமாக வனைந்தெடுத்தீர் - (2) 

கல்வாரி காட்ச்சிகள் கண்கள் முன்னே 
கதறிடும் குரலும் என் காதினிலே  - (2)
உண்மையாய் நேசித்த தயவினாலே - (2) 
என்னையே தருகிறேன் அன்பினாலே - (2)

Maranamo jeevano nigazh kaariyamo
Maranamo jeevano varum kaariyamo
Ethuvume um anbai vittu 
Pirithidaathu ennai

Aaraathippaen Aaraathippaen
Aaraathippaen Aayulellaam
Aaraathippaen Aaraathippaen
Aaviyodu unmaiyodu aaraathippen

Enakkaagave neer adikkappatteer
En paava baaram ellaam neer sumantheer
Uruvatra ennaiyum neer uruvaakkineer
Payanulla paandamaaga vanainthedutheer

Kalvaari kaatchchigal kangal munne
Katharidum kuralum en kaathinile
Unmaiyaai naesiththa thayavinaalae
Ennaiyae tharukiraen anbinaale 

யாக்கோபின் தேவன் என் தே­வன் - Yaakkoabin Devan En Devan

யாக்கோபின் தேவன் என் தே­வன் - Yaakkoabin Devan En Devan
யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)

ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2)

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2)

Yaakkoabin Devan En Devan
Enakkendrum Thunai Avarae
Ennaalum Nadaththuvaarae (2)

Yethum Illai Endra Kavalai Illai
Thunaiyaalar Ennai Vittu Vilagavillai (2)
Sonnathai Seythidum Thakappan Avar
Nambuvaen Iruthi Varai (2)

En Oattaththil Naan Thanimai Illai
Nesiththavar Ennai Verukkavillai (2)
Thakappan Veettil Koddu Serththiduvaar
Nambuvaen Iruthi Varai (2)

Friday, June 7, 2019

உம்மை ஆராதிக்கின்றோம் - Ummai aaraathikintrom

உம்மை ஆராதிக்கின்றோம் - Ummai aaraathikintrom
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Ummai aaraathikintrom
iyaesuve ummai aaraathikintrom
Neer nallavar sarva vallavar
Ummai poal vaeru dheivamillai
Allaelooyaa Allaelooyaa – 2

Paaviyaana ennaiyum – um
Pillaiyaai maatrineer 

Ennai azhaithavarae
Neer unmaiyullavarae 

Undhan parisutha aaviyaal
Ennaiyum niraiththeerae 

Ennai ma’uroobamaakkum – undhan
Magimaiyil saerthidum 

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் - Aaradhanai adhiga sthothiram

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் - Aaradhanai adhiga sthothiram
ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2
என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2

பரலோக தூதர் சேனைகள்
வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2

வடியும் கருணையுள்ள இரத்தம்
என்னை தொட்டு செல்கையில்-2
என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2

Aaradhanai adhiga sthothiram – 2
En yesuvukke en muzhumayum
En yesuvukke ellam samarpanam – 2

Paraloga dhoodar senalga
Vaanjithu ummai thuthikkayil – 2
Muzhuvullathodu naanum ummai thuthikkiren – 2
Paavi naanayya ennai etrukollum – 2

Vadiyum karunayyulla ratham
Ennai thottu selgayil – 2
En paavamellam maraindhu ponadhe – 2
En jeevitham umakke samarpanam – 2 


ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் - Oruvaraai periya athisayam seibavar

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் - Oruvaraai periya athisayam seibavar
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்-2

நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்

காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்


Oruvaraai periya athisayam seibavar
Sera koodaatha oliyil iruppavar -2

Umakku uthavi thaevai illai 
neerae periyavar
Um karaththin vallamai 
Ellaam seithu mudikkum-2

Neer moochu vittaal kadalae pilanthu nirkkum
Neer sollumpothu pilantha kadal ontru saerum

kaatrai anuppi kariyai koduppeer
Kallai pilanthu thanneer tharuveer
oru kaatrai anuppi kaadai koduppeer
Kallai pilanthu kudikka thanneer tharuveer

Oru vaarththai sonnaal Ellaamae maari pogum
En nerukkamellaam thooram oadi pogum

Monday, April 8, 2019

இயேசுவே என் தெய்வமே Iyeasuvea En Deyvamea

இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)

நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2

உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2

முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2

துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே

அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2

Iyeasuvea En Deyvamea
en meal manamirangkum (2)

Naan paavam cheythean
ummai noakach cheythean (2)
ummaith theadaamal vaazhnthu vanthean – 2
ennai manniyum theyvamea – 2

Ummai ma’ruthaliththean
pin vaangkip poanean (2)
um vallamai izhantheanaiyaa -2
ennai manniyum theyvamea – 2

Mu’lmudi thaangki
aiyaa kaayappaddeer (2)
neer enakkaaka paliyaaneer -2
um iraththaththaal kazhuvividum – 2

Thunpa vea’laiyilea
manam thuva’ndu poanean (2)
ummai ninaiyaathu thoorap poanean – 2
ennai manniyum theyvamea intha
oru visai manniyumea – iyeasuvea

Aniyaayam cheythean
kadumkoapam ko’ndean (2)
pi’rar vaazhvaik keduththeanaiyaa – 2
ennai manniyum theyvamea – 2

Friday, January 4, 2019

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar karam en maelanga

கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவு பயமில்லங்க
கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவு பயமில்லங்க

ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்

ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்

அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே

இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்

தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்

பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க


Karthar karam enmaelanga
kadugalavum bayam illainga

Yenthiduvaar ennai thaangiduvaar
Iruthivarai ennai nadaththiduvaar

oottiduvaar thaalaattiduvaar
ethiri vanthaal eththiduvaar

Anaippaarae aravanaippaare
Alli alli muththam koduppaarae

iraththathaale kazhuvukiraar
iratchippaale uduthukiraar

thaalaattuvaar seeraattuvaar
vaalaakkaamal thalaiyaakuvaar

pariththu kolla mudiyaahtunnga
oruvaraalum mudiyaathunga