Search a song (Type in tamil for better results)

Thursday, April 30, 2015

நீர் என்னோடு இருக்கும்போது




நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே - 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே - 2


1.மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் - 2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் - 2

2.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே - 2
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் - 2

3.மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? - 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே - 2

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்




பயப்படமாட்டேன்  நான் பயப்படமாட்டேன்

பயப்படமாட்டேன்  நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

யாக்கோபை போல நான் போராடுவேன்




யாக்கோபை போல நான் போராடுவேன்

யாக்கோபை போல நான் போராடுவேன்
எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

1. அன்னாளை போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இரங்கி வாரும் ஐயா

3. தாவீதை போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்

Friday, April 24, 2015

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்




உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

பெலத்தால் இடைகட்டி
வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்

அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

Thursday, April 23, 2015

நீரின்றி வாழ்வேது இறைவா




நீரின்றி வாழ்வேது இறைவா

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஒராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா

எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

இயேசுவின் பிள்ளைகள் நாங்க‌ள்




இயேசுவின் பிள்ளைகள் நாங்க‌ள்

இயேசுவின் பிள்ளைகள் நாங்க‌ள்
எப்போதும் ம‌கிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைக‌ளே
எப்போதும் ம‌கிழ்ந்திருங்கள்

ந்நேர‌மும் எவ்வேளையும்
இயேசுவில் க‌ளிகூறுவோம்
ந‌ம் நேச‌ரில் க‌ளீகூறுவோம் (2)

எதை நினைத்தும் க‌ல‌ங்காம‌ல்
இப்போதும் ஸ்தோத்த‌ரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்த‌ரிப்போம்

இன்று காணும் எகிப்திய‌ரை
இனிமேல் காணாமாட்டோம்
ந‌ம‌க்காய் யுத்த‌ம் செய்வார் - இயேசு

ந‌ம‌க்கு எதிராய் ம‌ந்திர‌ம் இல்லை
குறிசொல்ல‌ல் எதுவும் இல்ல
சாத்தான் ந‌ம் காலில் கீழே இன்று

காற்றை நாம் காண‌மாட்டோம்
ம‌ழையயையும் பார்க்க‌ மாட்டோம்
வாய்க்கால்க‌ள்: நிர‌ப்ப‌ப்ப‌டும்

நினைப்ப‌த‌ற்கும் வேண்டுவ‌த‌ற்கும்
அதிக‌மாய் செய்திடுவார்
அதிச‌யம் செய்திடுவார்

Wednesday, April 22, 2015

தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில்




தனிமையின் பாதையில்  தகப்பனே உம் தோளில்

தனிமையின் பாதையில்  தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
தனிமையின் பாதையில்  தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ

ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல்
எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக்கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே

உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேளையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே

பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்

Monday, April 20, 2015

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது




நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்

1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் --- நன்றி

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா --- நன்றி

3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் --- நன்றி

Saturday, April 18, 2015

ஊற்றிடுமே உம் வல்லமையை




ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மேலே
வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனெல்கொண்டு உமக்காக எழும்பிட - ஊற்றிடுமே

பெந்தேகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே
அப்போஸ்தாலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே - ஊற்றிடுமே

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்றவேண்டுமே
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீண்ட செய்யும்மே
நதியாய் பாய்ந்திடுமே - ஊற்றிடுமே

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
ஆக்கினியை ஊற்றிடுமே - ஊற்றிடுமே

வாரும் தூய ஆவியே




வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே - உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் - உம்
வல்லமையால் என்னை நிறைத்த்து - நீர்
ஆளுகை செய்யும் - வாரும்

1. ஜீவ தண்ணீர் நீரே
  தாகம் தீர்க்கும் ஊற்று
  ஆலோசனை கார்‌த்தரே - என்னை
  ஆளுகை செய்யும் - வாரும்

2. ஆக்கினியும் நீரே
   பெரும் காற்றும் நீரே
   பெருமழை போலவே - உம்
   ஆவியை ஊற்றும் - வாரும்

அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

நல்லவரே.. வல்லவரே . . . . . . .

அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

Thursday, April 16, 2015

மகிமையின் நம்பிக்கையே




மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

ஆளுகை செய்யும் ஆவியானவரே




ஆளுகை செய்யும் ஆவியானவரே

ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

பாரீர் அருணோதயம் போல்




பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே 

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்

லீலி புஷ்பமுமாம் ஆ
பதினாயிரங்களில் சிறந்தோர் 

காட்டு மரங்களில் கிச்சலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதுரம் 

அவர் இடது கை என் தலைகீழ்
வலக்கரத்தாலே தாங்குகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே 

என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் 

என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே 

நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்தில் 


அனாதி தேவன் உன் அடைக்கலமே




அனாதி தேவன் உன் அடைக்கலமே 

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த

6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த


கிருபையால் நிலை நிற்கின்றோம்




கிருபையால்  நிலை  நிற்கின்றோம் 

கிருபையால்  நிலை  நிற்கின்றோம்  – உம்
கிருபையால்  நிலை  நிற்கின்றோம்
கிருப …கிருப …கிருப …கிருப

பெயர்  சொல்லி  அழைத்தது  உங்க  கிருப
பெரியவனாக்கியது   உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப

நீதிமானாய் மாற்றியதும்  உங்க  கிருப
நித்தியத்தில்  சேர்ப்பதும்  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப

கட்டுக்களை  நீக்கியது  உங்க  கிருப
காயங்களை  கட்டியது  உங்க  கிருப
கிருப …கிருப …கிருப …கிருப

வல்லமையை  அளித்தது  உங்க  கிருப
வரங்களை  கொடுத்ததும்  உங்க  கிருப

கிருப …கிருப …கிருப …கிருப




நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்

நாம் இடைவிடாமல்
ஆராதிக்கும் தேவன் நல்லவரே
நாம் இடைவிடாமல்
ஆராதிக்கும்  தேவன் பெரியவரே

தப்புவிக்க வல்லவர்
தவறாமல் காப்பவர்
அவர் கிருபை என்றும் உள்ளது
அவர் தயவு என்றும் உள்ளது 

உன்னதித்தில் அமர்ந்திடும் இயேசுவே
அதிகாரம் நிறைந்தவரே
உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம் (4)
                               - தப்புவிக்க வல்லவர்

யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே
பராக்கிரமம் உடையவரே
உம்மை பணிந்தே தொழுகிறோம் (4)
                               - தப்புவிக்க வல்லவர்

சிங்காசனம் அசைத்திடும் இயேசுவே
நினைத்ததை செய்பவரே
உம்மை தடுப்பவர் இல்லையே (4)
                               - தப்புவிக்க வல்லவர்


சொந்தம் என்று சொல்லிக்கொள்ள




சொந்தம் என்று சொல்லிக்கொள்ள 

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே

உம தழும்புகளால் நான் சுகமானேன்
உம வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன்(2)

உம கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம பாசத்தினால் நான் திகைத்துப்போனேன்
நான் திகைத்துப்போனேன் (2)

உம ஆவியினால் நான் பிறந்துவிட்டேன்
உம் ஊழியத்திர்க்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன்(2)


அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்




அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் 

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
  முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
  முழு பெலத்தோடு அன்பு கூறுவென்
     ஆராதனை ஆராதனை - 2

1. எபிநெசரே எபிநெசரே
  இதுவரையில் உதவினீரே ‍ உம்மை

2. எல்ரோயீ எல்ரோயீ
  என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை

3. யோகோவா ராப்பா யோகோவா ராப்பா
  சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை