Search a song (Type in tamil for better results)

Friday, February 28, 2020

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை - Naalaiya thinathai kurithu bayam illai

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை - 
Naalaiya thinathai kurithu bayam illai
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயா

கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை அல்லேலூயா

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் அல்லேலுயா

Naalaiya thinathai kurithu bayam illai
Naayagan Yesu ellaam paarthu kolvaar

Aandavar enathu velichamum meetpumaanaar
etharkkum bayappaden
avare enathu vaazhvin belanaanaar
yaarukkum anjiden - allelooyaa

Kedu varum naalil koodaara maraivinile
olithu vaithiduvaar
Kanmalaiyin mel uyarththi niruthiduvaar
kalakkam enakkillai - allelooyaa

Thagappanum thaayum ennai kaivittaalum
karthtar serthu kolvaar
kartharukkaai naan thinamum kaathiruppen
puthu belan petiduven - allelooyaa