Search a song (Type in tamil for better results)

Thursday, November 12, 2020

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் - Sirumaiyium Elimaiyumaana en mel

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் - Sirumaiyium Elimaiyumaana en mel

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
நினைவாய் இருப்பவரே

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே

Sirumaiyium Elimaiyumaana en mel
Ninaivaai iruppavare

En belanum neere kottaiyum neere
Ummai thedukiren
En belanum neere kottaiyum neere
Ummai vaanchikkiren

Karthaave naan nilaiyatravan
En kaalgalai sthirappaduththum

Thagappane unthan thayai konda anbaal
Thazhuvi ennai thaangume
Thayangidum nerathil theevaa unthan tholil sumanthidume

Ularntha en elumbugal uyiradainthonga
theva um belan thaarume
Uyirulla varaiyil umakkaaga vaazhum unarvinai uruvaakkume

Tuesday, November 10, 2020

ராஜா உம் கண்கள் என்னை காண -Rajaa um kangal ennai kaana

                     ராஜா உம் கண்கள் என்னை காண -Rajaa um kangal ennai kaana

ராஜா உம் கண்கள் என்னை காண
என்ன நன்மை என் வாழ்வில் கண்டீர் 
தள்ளப்பட்ட என்னை தலைக்கல் ஆக்க
தகுதி என்ன என் வாழ்வில் கண்டீர் 

எல்லாம் உங்க கிருபை
எல்லையில்லா உம்  கிருபை

தாயின் கருவில் உருவாக்கினீர்
பெயர் சொல்லி என்னை அழைத்தீர்  
மறவாமல் நினைத்தீர் உம் மந்தையில் சேர்த்தீர் 
நான் தவறாமல் நடத்திவந்தீர்

பொல்லா உலகம் மேற்கொண்டிடாது
உம் பெலத்தால் இடைகட்டினீர்
மாயையாம் உலகில் மயங்கின வேளை
என் மனக்கண்கள் தெளிவாக்கினீர்

எண்ணில்லா நன்மை எனக்களித்தீர்
என்னையும் உயர்த்தி வைத்தீர்
வழுவாது காத்து பிள்ளையாய் சேர்த்து
வார்த்தையால் வழி காட்டினீர்

Rajaa um kangal ennai kaana
Enna nanmai en vaazhvil kandeer
Thallapatta ennai thalai kallaakka
Thaguthi enna en vaazhvil kandeer

Ellaam unga kirubai
Ellai illaa um kirubai

Thaayin karuvil uruvaakkineer
Peyar solli ennai azhaitheer
Maravaamal ninaitheer um manthaiyil sertheer
Naan thavaraamal nadaththi vantheer

Pollaa ulagam merkondidaathu
um belathaal idai kattineer
Maayayaam ulagil mayangina velai
En manakkangal thelivaakkineer

Ennillaa nanmai enakkalitheer
Ennaiyum uyarththi vaitheer
Vazhuvaathu kaaththu pillaiyaai serththu
Vaarthaiyaal vazhi kaattineer