Search a song (Type in tamil for better results)

Wednesday, May 27, 2020

இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் - Yesuvin naamam en jeevanai kaakkum

இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் - Yesuvin naamam en jeevanai kaakkum
இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் 
ஆட்டுக்குட்டி இரத்தம் என் வீட்டின் முத்திரை 

மறைந்து வரும் கொள்ளை நோய்களுக்கும் 
பயப்படேனே நான் பயப்படேனே

வியாதி பயம் மரண பயம் 
இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும் 

பொல்லாப்பு எனக்கு நேரிடாது 
வாதை என் கூடாரத்தை அணுகிடாது

பரலோக  சேனையின் காவலுண்டு
சர்வ வல்ல தேவனின் கிருபையுண்டு 

உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே  
மறந்திடுவோம் நோயின் பெயர்களையே

Yesuvin naamam en jeevanai kaakkum
aatu kutti raththam en veettin muththirai

marainthu varum kollai noikalukkum
bayappadene naan bayappadene

Viyaathi bayam marana bayam
iyaesuvin naamaththil vilagidattum

pollaappu enakku neridaathu
vaathai en koodaaraththai aNukidaathu

paraloga senaiyin kaavalundu
sarva valla devanin kirubai undu

uyarthiduvom yesuvin naamaththaiye
maranthiduvom noyin peyargalaiye

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் - Aaviyaanavare ummai vaanjikkiren

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் - Aaviyaanavare ummai vaanjikkiren
ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
உந்தன் மகிமையின் பிரசன்னம்
நிறைவாய் இறங்கட்டும் இந்த வேளையிலே

ஆவியிலே களிகூரவே என்றென்றும் விரும்புகிறேன்
வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே
நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன்
பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்ளுகிறேன்

தாவீது போல் மகிழ்ந்திடவே சமூகம் வேண்டுகிறேன்
ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திடுமே
உன்னதத்தில் உம்முடனே உறவாட உதவிடுமே
ஆவிக்குள்ளாய் அனுதினமும் அனல்வுணர்வூட்டிடுமே

மேல்வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே
ஆவிமழை கரைபுரள தேசத்தை சந்தியுமே
தேசமெல்லாம் அசைந்திடவே எழுப்பிடும் வாலிபரை
எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்ப்பிக்க செய்திடுமே

Aaviyaanavare ummai vaanjikkiren
unthan magimaiyin pirasannam 
niraivaai irangattum intha velaiyile

aaviyile kalikoorave entrentrum virunmbukiren
Vaanjikkiren ennaalume unthan samoogathaiye
Nesar mugam kaangayile aaviyil nirambukiren
paadi ummai thuthikkaiyile paravasam kollukiren

thaaveethu pol magizhnthidave samoogam vendukiren
aadipaadi thuthithidave viduthalai eenthidume
unnathaththil ummudane uravaada uthavidume
aavikkullaaai anuthinamum analvunarvoottidume

mel veettarai anubavathai entrentrum thanthidume
aavi mazhai karai purala thesaththai santhiyume
Thesamellaam asainthidave ezhumbidum vaalibarai
ezhupputhalaal puthu ullangal uyirpikka seithidume