Search a song (Type in tamil for better results)

Thursday, April 29, 2021

என் தேவனே உம் முகம் என் மீதிலே பிரகாசியும் - En devane um mugam en meethile pirakaasiyum

என் தேவனே உம் முகம் என் மீதிலே பிரகாசியும் - En devane um mugam en meethile pirakaasiyum

To listen to this song: Youtube link

என் தேவனே உம் முகம்
என் மீதிலே பிரகாசியும்
உம் தோளிலே இளைப்பாறி நான்
உம் ஆறுதல் நான் காணட்டும்

கொள்ளை நோய்களின் அலைகளோ
கொடுமையின் வலைகளோ
வல்ல கரமே என்னை மூடும்
வியாதி வேதனை விலகி ஓடும்

சூழ்நிலைகளின் சுமைகளோ
சுற்றும் தாழ்மையின் நிலைகளோ
உமது பெலனே என்னை தாங்கும்
காற்றும் கடலும் அமைதலாகும்

உடைத்து தகர்த்திடும் வலிகளோ
தவிக்கும் தனிமையின் பயங்களோ
குயவன் கரமே என்னை வனையும்
உமது சித்தம் என்னை நடத்தும்

En devane um mugam 
En meethile prakaasiyum
Um tholile ilaippaari naan 
Um aaruthal naan kaanattum

Kollai noigalin alaigalo
Kodumaiyin valaigalo
Valla karame ennai moodum
Viyaathi vethanai vilagi odum

Soozhnilaigalin sumaigalo
Surum thaazhmaiyin nilaigalo
umathu belane ennai thaangum
Kaatrum kadalum amaithalaagum

Udaiththu thagarthidum valigalo
Thavikku thanimaiyin bayangalo
Kuyavan karame ennai vanaiyum
Umathu sitham ennai nadaththum

To listen to this song: Youtube link