Search a song (Type in tamil for better results)

Thursday, May 28, 2015

இராஜா உம் மாளிகையில் ( Raja um maaligayil )



இராஜா உம் மாளிகையில்
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் – உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்

என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே

எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே

பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே

உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே

தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் ( Karthave devargalil unakoppanavar )



கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் -2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

தூதர்கள் உண்ணும் உணவால் 
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர்

Thursday, May 14, 2015

நீரே எல்லாம் இயேசுவே ( Neerae ellaam yesuve )



நீரே எல்லாம் இயேசுவே

நீரே எல்லாம்
நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவை
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவை

நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவை
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவை

பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவை
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவை

உயரமும் உன்னதமுமான ( Uyaramum unnathamum )



உயரமும் உன்னதமுமான

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
பரிசுத்தர் பரிசுத்தரே

ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்

ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்

எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் ( Nesare um thiru paatham )



நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தமே ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே 
ஆராதனை ஆராதனை

உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே 
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயமே நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை ( Naan ummai vittu vilaguvathillai )



நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காண்பேன் (2)

பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

தேவனே, நான் உமதண்டையில் ( Devane naan umathandayil )



தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.


மாவலிய கோரமாக
வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன் - தேவனே

யாக்கோபைப்போல், போகும் பாதையில்
பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்,
வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே

பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே

நித்திரையினின்று விழித்துக்
காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

ஆனந்தமாம் செட்டை விரித்துப்
பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
வான மண்டலங் கடந்து
பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே

Friday, May 8, 2015

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே ( Oruvarum sera koodaatha oilyil )




ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (2)



எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே நீர் மாத்ரமே

எல்லாவற்றிலும் நீர் மேலானவர் ( Ellavatilum neer melaanavar )


எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வ வல்லவரே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை
நீரே நீர் மாத்ரமே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
நீரே நீர் மாத்ரமே


ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (2)
நீரே பரிசுத்த தெய்வம் (2)
நீரே நீர் மாத்ரமே (2)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (4)
நீரே நீர் மாத்ரமே (2)

ராஜா உம் பிரசன்னம் போதுமையா ( Raja um prasannam pothumaiyaa )




ராஜா உம் பிரசன்னம் போதுமையா

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

உலகமெங்கும் மயையையா
உம் அன்பொன்றே போதுமையா

இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே

துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே

சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா ( Unga mugatha paarkkanume yesaiyaa )




உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா

உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா – 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

1. எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் - 2

2. யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் - 2

3. எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் - 2

4. பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும்
உம் கிருபை என்றும் எனக்குப் போதும் - 2

5. கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர்
என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் - 2

6.எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே
எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே - 2

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே ( Jeeva thanneerae aaviyaanavarae )




ஜீவத் தண்ணீரே ஆவியானவரே 

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதயாக வாரும் போதகரே

வாரும் ஐயா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக (2)

1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2)

2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே

3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்

4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

துதிப்பதே என் தகுதியல்லோ ( thuthipatahee en thaguthiyallo )




துதிப்பதே என் தகுதியல்லோ

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே



Thursday, May 7, 2015

உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா




உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (2) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மருந்தே


புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்




புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா - புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும் - புது

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா - (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) - (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) - (2) - புது

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க - (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) - (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) - (2) - புது


உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்




உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்

உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் (2)

1. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே (2)

2. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)

3. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் (2)

4. உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் (2)

5. சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் (2)