Search a song (Type in tamil for better results)

Friday, March 4, 2016

மகிமை உமக்கன்றோ - Magimai umakkanto


மகிமை உமக்கன்றோ
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
துயவர் உமக்கன்றோ

ஆராதனை – ஆராதனை – என்
அன்பர் இயேசுவுக்கே

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் 
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர் – மகிமை

வழி காட்டும் தபம் துணையாளரே 
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல் மூட்டும் ஐயா அபிகே நாதரே- மகிமை

எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற 
எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக- மகிமை

என்னை ஆனந்த தைலத்தால் - Ennai aanantha thailathaal


என்னை ஆனந்த தைலத்தால்
என்னை ஆனந்த தைலத்தால் 
அபிஷேகம் செய்திடும் 
ஆவியானவரே - (4)

ஆவியானவரே 
அன்பின் ஆவியானவரே - (4)

வறண்ட நிலங்கள் 
வயல்வெளியாகட்டும் 
ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2)

உலர்ந்த எலும்புகள் 
உயிரோடு எழும்பட்டும் 
ஆவியானவரே - (2)
அன்பின் ஆவியானவரே - (2)

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் - Uthavi varum kanmalai nokki


உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
உதவி வரும் கன்மலை
நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்க்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்கமாட்டார்

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காக்கின்றார்
அவர் எனது ஆத்துமாவை
அநுதினம் காத்திடுவார்

போகும்போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார்