Search a song (Type in tamil for better results)

Friday, August 31, 2018

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் - Intha kallin mael en sabayai kattuvaen

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே -2
அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே

இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபை இதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலம் இதுவே -2
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்துனீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை /வீடு இதுவே
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே -2
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே

பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர் -2
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே




Indha kallinmel en sabaiyai kattuven
Paathalathin vaasal athai merkollathae – 2
Sabaiyin thalaivar yesuvae
Moolaikku thalaikkal yesuvae -2
Hallelujah -2
Sabaithan jeyikkumae
Hallelujah -2
Paathalam thorkkumae

Ratham sinthi meetkappatta sabai idhuvae
Sutham pera kristhu thantha sthalam ithuvae-2
Sabaithanil nilai naattineer
Puthu manidhanai ennai maatrineer
Vaazhkkaiyai sezhippakkineer
Kirubaiyal uyarthineer
Ennai kirubaiyal uyarthineer

Jebathinaal kattappatta sabai/veedu ithuvae
Kudumbamaai inaitha nal uravithuvae
Aaviyin nalla thagappanae
Sabai muzhuvathum engal sonthamae
Vaetrumaigal ingu illaiyae
Crishthuvin sariramae
Naangal Crishthuvin sariramae

Paarvonin vallamaigal muriya seitheer
Yesabelin thanthirangal azhiya seitheer -2
Ezhupputhal tharum akkini
Engal jebathilae pattri yeriyuthae
Thadaigalai athu thagarkkuthae
Sabaidhan vellumae
Endrum sabaithan vellumae

No comments:

Post a Comment