Search a song (Type in tamil for better results)

Thursday, January 11, 2018

புது வாழ்வு தந்தவரே - Puthu vaazhvu thanthavarae

புது வாழ்வு தந்தவரே
புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்

(உம்) பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்

2 comments: