Search a song (Type in tamil for better results)

Friday, October 9, 2015

தந்தேன் என்னை இயேசுவே


தந்தேன் என்னை இயேசுவே
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
 உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்

ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்

உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்

கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும்

ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

3 comments:

  1. Very meaningful song.. Its story is still touching..
    "தந்தேன் என்னை இயேசுவே" உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. - (சங்கீதம் 143:10).
    லண்டன் மிஷனெரி சங்கத்தை சேர்ந்த ஆங்கிலேய மிஷனெரி ஒருவர் கொடைக்கானலில் தங்கியிருந்து ஊழியம் செய்து வந்தார். இவர் ஒரு முறை பிரயாணமாக தன் குதிரையில் வத்தலகுண்டு வந்திருந்தார். தன் வேலைகளை முடித்துவிடடு திரும்புமுன் வத்தலக்குண்டில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டப்பின்னர், இலையை போட்டுவிட்டு கையைக் கழுவும்படி சென்றார்.
    அப்பொழுது அவர் சாப்பிட்டு விட்டு போட்ட இலையில் மீதியிருக்கும் உணவு துணிக்கைகளை ஒரு பையன் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதைக் கண்ட மிஷனெரி உடனடியாக அப்பையனுடைய இரண்டு கைகளையும் தடுத்து அந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.
    பின்பு அந்தப்பையனைப் பார்த்து, 'தம்பி உன் வீடு எங்குள்ளது? உன் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?' எனக் கேட்டார். 'எனக்கு யாருமே இல்லை ஐயா, வீடும் எனக்கு கிடையாது' என அப்பையன் கூறினான். அதைக் கேட்ட மிஷனெரி 'என்னுடன் வருகிறாயா? என்னுடன் தங்கியிருக்க உனக்கு விருப்பமா?' எனக் கேட்டவுடன் அப்பையனும் அதற்கு இசைந்து அவருடன் சென்று கொடைக்கானலில் தங்கினான். சில வருடங்கள் கடந்தோடின. அந்த சிறுபையன் வாலிபனாகி வி;ட்டான். அதன் மத்தியில் அந்த மிஷனெரிக்கு பணியிட மாறுதலாக திரும்ப லண்டன் வரும்படி அழைப்பு வந்தது. லண்டன் கிளம்ப ஆயத்தமான மிஷனெரி தான் பராமரித்து வந்த அந்த வாலிபனிடம், 'தம்பி நான் நீண்ட தூரம் பயணம் போகிறேன். இனிமேல் நீயும் நானும் சந்திப்போம் என்பது மிகவும் அரிது. நான் போனபின்பு நீ என்ன செய்யப் போகிறாய்? உன் எதிர்காலத்திட்டம் என்ன?' எனக் கேட்டார். கண்களில் கண்ணீர் துளிகள் நிரம்ப அவ்வாலிபன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துத் தான் எழுதிய பின்வரும் பாடலை பாடினாராம்,

    தந்தேன் என்னை இயேசுவே
    இந்த நேரமே உமக்கே
    உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
    தந்தேன் என்னைத் தாங்கியருளும்

    ஜீவ காலம் முழுதும்
    தேவ பணி செய்திடுவேன்
    பூவில் கடும் போர் புரிகையில்
    காவும் உந்தன் கரத்தினில் வைத்து

    உலகோர் என்னை நெருக்கிப்
    பலமாய் யுத்தம் செய்திடினும்
    நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
    நானிலத்தினில் நாதா வெல்லுவேன்

    உந்தன் சித்தமே செய்வேன்
    எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
    எந்த இடம் எனக்குக் காட்டினும்
    இயேசுவே அங்கே இதோ போகிறேன்

    கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
    துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
    அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
    அடியேன் உம்மில் அமரச் செய்திடும்

    ஒன்றுமில்லை நான் ஐயா
    உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
    அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
    இன்றே அடியேனை நிரப்பும்.

    இப்பாடலை பாடி பின்பு மிஷனெரியைப் பார்த்து 'என்னை மீட்டு எனக்கு புது வாழ்வைக் கொடுத்த இயேசுவுக்கே என் எதிர்காலம்' எனக் கூறினாராம்.
    பிரியமானவர்களே, நம்மை இம்மட்டும் நடத்தி வந்த வழிகளை நினைத்துப் பார்த்தால் கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நம் தேவைகளை அதிசயமாய் சந்தித்தாரே! நம் கண்ணீரை துடைத்தாரே! வியாதியில் நம் வியாதிப்படுக்கையை மாற்றிப் போட்டாரே! ஒவ்வொரு நாளும் நம்மை அதிசயங்ளை காணச் செய்த தேவன் அல்லவா?
    நமக்கு இன்னும் எத்தனையோ நன்மைகளை செய்த தேவனுக்கு நாம் என்ன சொல்லி துதிக்கப் போகிறோம்? ஒன்றுமில்லாமையிலிருந்து அந்த சிறுவனை ஒரு மகனைப் போல தத்தெடுத்து அந்த மிஷனெரி வளர்த்து ஆளாக்கியதுப் போல ஒன்றுமில்லாமையிலிருந்து நமக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்கள்தான் எத்தனை எத்தனை! அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நாம் இந்நாளில் இந்த நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்றால், நாம் தேவனை, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காகவல்லவா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா !! பாடலுக்கு உள்ள உண்மை கருத்தை இத்தகவல் விளங்க செய்கிறது.

      Delete
    2. அது ஏன் ஏழுதியவர் யார் என குறிப்பிடபடவில்லை

      Delete