Search a song (Type in tamil for better results)

Thursday, November 18, 2021

இயேசு பிறந்தார் என்னை மீட்கவே - Yesu piranthaar ennai meetkave

  இயேசு பிறந்தார் என்னை மீட்கவே - Yesu piranthaar ennai meetkave

இயேசு பிறந்தார் என்னை மீட்கவே
விண்ணை துறந்து  மண்ணில் பிறந்தார்
இருளில் வாழும் மனிதர் எல்லாம்
ஒளியில் வாழவே உன்னதர் பிறந்தார்.

பாவ உலகில் வாழும் மனிதன்
மீட்டப்பை தேடியே ஓடி அலைய
வார்த்தையானவர் வழியை காட்டவே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்

சிந்தை கடினம் கல்லாம் இதயம்
நித்தம் மரணம் ஆண்ட தருணம்
பாசமாய் பரன் நேசம் காட்டியே  
பாவம் போக்கும் பலியாய் பிறந்தார்

மண்ணில் சத்திரம் பிறப்பால் மகிழ
விண்ணில் நட்சத்திரம் சிறப்பாய் ஒளிர
மேய்ப்பர் ஞானியர் பணிந்து கொண்டனர்
வழியும் சத்தியம் ஜீவன் கண்டனர் 

Yesu piranthaar ennai meetkave
Vinnai thurathu mannil piranthaar
Irulil vaazhum manithar ellaam 
Oliyil vaazhave unnathar piranthaar

Paava ulagil vaazhum manithan
Meetpai thediye oadi alaya
Vaarthaiyaanavar Vaazhiyai kaattave
Vinnai vittu mannil piranthaar

Sinthai kadinam kallaam ithayam
Nitham maranam aanda tharunam
Paasamaai paran nesam kaattiye
Paavam pokkum paliyaai piranthaar

Mannil chathiram pirappaal magizha
Vinnil natchathram Sirappaai olira
Meipar jgaaniyar paninthu kondanar
Vazhiyum saththiyam jeevan kandanar


மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே - Magimayin megamaaga irangi vandheerae

  மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே - Magimayin megamaaga irangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ‌ஆறுதலே

மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள்‌ மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே

முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே

சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

Magimayin megamaaga irangi vandheerae
Aasaripu koodarathil irangi vandheerae

Vaarum iyya, nallavarae,
Thunaiyaalarae, engal aarudhalae

Maga parisutha sthalathinil
Kerubeengal mathiyil
Kirubaasanam meethinil
Irangi vandheerae

Mutchediyin mathiyil
Seenai malai uchiyil
Kanmalayin vedipinil
Irangi vandheerae

Seedargalin mathiyil
Mel veetu araiyinil
Bendhecosthe naalinil
Irangi vandheerae

Saturday, May 22, 2021

விண்ணப்பத்தைக் கேட்பவரே - Vinnnappathai Kaetpavarae

 விண்ணப்பத்தைக் கேட்பவரே - Vinnnappathai Kaetpavarae

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

Vinnnappathai Kaetpavarae
En Kannnneerai Kaannpavarae
Sukam Tharupavarae Sthothiram Yesaiyaa

Ummaal Koodum Ellaam Koodum
Oru Vaarththai Sonnaal Pothum

Manathuruki Karam Neeti
Athisayam Seipavarae

Sitham Unndu Suthamaaku
Endru Solli Sukamaakkineer

En Noikalai Siluvaiyilae
Sumanthu Theertheeraiyyaa

Kurudarkalai Paarka Seitheer
Mudavarkalai Nadaka Seitheer

Um Kaayathaal Sukamaanaen
Oru Kodi Sthothiramae

Thursday, April 29, 2021

என் தேவனே உம் முகம் என் மீதிலே பிரகாசியும் - En devane um mugam en meethile pirakaasiyum

என் தேவனே உம் முகம் என் மீதிலே பிரகாசியும் - En devane um mugam en meethile pirakaasiyum

To listen to this song: Youtube link

என் தேவனே உம் முகம்
என் மீதிலே பிரகாசியும்
உம் தோளிலே இளைப்பாறி நான்
உம் ஆறுதல் நான் காணட்டும்

கொள்ளை நோய்களின் அலைகளோ
கொடுமையின் வலைகளோ
வல்ல கரமே என்னை மூடும்
வியாதி வேதனை விலகி ஓடும்

சூழ்நிலைகளின் சுமைகளோ
சுற்றும் தாழ்மையின் நிலைகளோ
உமது பெலனே என்னை தாங்கும்
காற்றும் கடலும் அமைதலாகும்

உடைத்து தகர்த்திடும் வலிகளோ
தவிக்கும் தனிமையின் பயங்களோ
குயவன் கரமே என்னை வனையும்
உமது சித்தம் என்னை நடத்தும்

En devane um mugam 
En meethile prakaasiyum
Um tholile ilaippaari naan 
Um aaruthal naan kaanattum

Kollai noigalin alaigalo
Kodumaiyin valaigalo
Valla karame ennai moodum
Viyaathi vethanai vilagi odum

Soozhnilaigalin sumaigalo
Surum thaazhmaiyin nilaigalo
umathu belane ennai thaangum
Kaatrum kadalum amaithalaagum

Udaiththu thagarthidum valigalo
Thavikku thanimaiyin bayangalo
Kuyavan karame ennai vanaiyum
Umathu sitham ennai nadaththum

To listen to this song: Youtube link

Wednesday, February 3, 2021

இம்மானுவேல் அவர் என்னோடுண்டு நான்

   இம்மானுவேல் அவர் என்னோடுண்டு நான்

இம்மானுவேல் அவர் என்னோடுண்டு நான் 
எதற்குமே அஞ்சிடேன் 
இல்லாமையோ இயலாமையோ அவை 
எதற்குமே அஞ்சிடேன் 
     எந்தன் பெலனவர் 
     பெலன் தருபவர் 
     தன பலத்தினால் 
     யுத்தம் ஜெயிப்பவர்

பக்கத்தில் ஆயிரம் பதினாயிரம் பேர் 
நெருக்கியே விழுந்தாலும் 
பாதை காட்டுவார் என்னை விடுவிப்பார் 
அவர் ஒத்தாசை அனுப்புவார் 

இரவின் பயங்கரம் பகலின் அம்புகள் 
நடமாடிடும் கொள்ளை நோய் 
பாழாக்கிடும் சங்காரமோ 
அவர் வசனமே கேடகம்

பாதம் கல்லிலே இடறாமலே 
பரலோகத்தின் தூதர்கள்
என்னை தங்குவார் விடுப்பார்
உயர் அடைகலத்தில் வைப்பார்

Friday, January 8, 2021

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் - vilunthu pokaamal thadukki vilaamal

   விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்  - vilunthu pokaamal thadukki vilaamal

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)
உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)

மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2)

அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும்  (2)
இப்போதும் எப்போதுமே 
உமக்கே உரித்தாகட்டும்  (2)

மெய் ஞானம் நீர்தானையா ரட்சகரும் நீர்தானையா (2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா (2)


vilunthu pokaamal thadukki vilaamal
kaakka vallavarae thinamum kaappavarae (2)
umakkae umakkae makimai maatchimai (2)

makimaiyin sannithaanaththil
mikuntha makilchchiyudan (2)
maasatta maganaaka(magalaaka) niruththa vallavarae (2)

athikaaram vallamai kanamum makaththuvamum  (2)
ippothum eppothumae 
umakkae uriththaakattum  (2)

mey njaanam neerthaanaiyaa ratchakarum neerthaanaiyaa (2)
meetparum neerthaanaiyaa
en maeypparum neerthaanaiyaa (2)

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு - aaththumaavae karththaraiyae Nokki amarnthiru

  ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு  -  aaththumaavae karththaraiyae Nokki amarnthiru

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)
நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே

விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2)
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) 

உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் (2)
வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) -நான்

பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2)
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2)

கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் – நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2)
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2)

5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2)
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2)



aaththumaavae karththaraiyae Nokki amarnthiru (2)
naan nampuvathu avaraalae(karththaraalae) varumae vanthidumae

vittuvidaathae nampikkaiyai vekumathi unndu
visuvaasaththaal ulakaththaiyae velvathu nee thaan (2)
unakkul vaalpavar ulakai aalpavar (2)

unnathamaana karththar karaththin maraivil vaalkintom
sarva vallavar nilalil thinam vaasam seykintom (2)
vaathai anukaathu theengu naeridaathu (2)

paalaakkum kollai Nnoy maerkollaamal
paathukaaththu payam neekki jeyam tharukintar (2)
sirakin nilalilae mooti maraikkintar (2)

karththar namathu ataikkalamum pukalidam aanaar – naam
nampiyirukkum nam thakappan entu solluvom (2)
sothanai jeyippom saathanai pataippom (2)

namathu thaevan ententaikkum sathaakaalamum
iruthivarai valinadaththum thanthai allavaa (2)
irakkam ullavar nam ithayam vaalpavar (2)

பலிபீடமே பலிபீடமே - balipeedamae balipeedamae

 பலிபீடமே பலிபீடமே  - balipeedamae balipeedamae

பலிபீடமே பலிபீடமே (2)
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே (2)
பலிபீடமே பலிபீடமே

பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான பரலோக பலிபீடமே (2)
ரத்தம் சிந்தியதால் இலவச
மீட்பு தந்த ரட்சக பலிபீடமே (2)

மன்னியும் மன்னியும் என்று மனதார
பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே (2)
எப்போதும் வந்தடைய இரக்கம்
சகாயம் பெற ஏற்ற பலிபீடமே (2)

ஈட்டியால் விலாவில் எனக்காக
குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே (2)
ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் (2) 

எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்
செய்து முடித்த அதிசய பலிபீடமே (2)
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி
அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே (2)

balipeedamae balipeedamae (2)
karaikal pokkidum
kannnneerkal thutaiththidum
kalvaari balipeedamae (2)
balipeedamae balipeedamae

paava nivirththi seyya
parikaara baliyaana paraloka balipeedamae (2)
raththam sinthiyathaal ilavasa
meetpu thantha ratchaka balipeedamae (2)

manniyum manniyum entu manathaara
parinthu paesum makimaiyin balipeedamae (2)
eppothum vanthataiya irakkam
sakaayam pera aetta balipeedamae (2)

eettiyaal vilaavil enakkaaka
kuththappatta en naesar balipeedamae (2)
raththamum thannnneerum purappattathae
jeeva nathiyaay eppati naan nanti solvaen (2)

ellaam mutinthathu entu anaiththaiyum
seythu mutiththa athisaya balipeedamae (2)
oppataiththaen aaviyai entu solli
arppanniththa oppatta balipeedamae (2)

Thursday, November 12, 2020

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் - Sirumaiyium Elimaiyumaana en mel

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் - Sirumaiyium Elimaiyumaana en mel

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
நினைவாய் இருப்பவரே

என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும்

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே

உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே
உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே

Sirumaiyium Elimaiyumaana en mel
Ninaivaai iruppavare

En belanum neere kottaiyum neere
Ummai thedukiren
En belanum neere kottaiyum neere
Ummai vaanchikkiren

Karthaave naan nilaiyatravan
En kaalgalai sthirappaduththum

Thagappane unthan thayai konda anbaal
Thazhuvi ennai thaangume
Thayangidum nerathil theevaa unthan tholil sumanthidume

Ularntha en elumbugal uyiradainthonga
theva um belan thaarume
Uyirulla varaiyil umakkaaga vaazhum unarvinai uruvaakkume

Tuesday, November 10, 2020

ராஜா உம் கண்கள் என்னை காண -Rajaa um kangal ennai kaana

                     ராஜா உம் கண்கள் என்னை காண -Rajaa um kangal ennai kaana

ராஜா உம் கண்கள் என்னை காண
என்ன நன்மை என் வாழ்வில் கண்டீர் 
தள்ளப்பட்ட என்னை தலைக்கல் ஆக்க
தகுதி என்ன என் வாழ்வில் கண்டீர் 

எல்லாம் உங்க கிருபை
எல்லையில்லா உம்  கிருபை

தாயின் கருவில் உருவாக்கினீர்
பெயர் சொல்லி என்னை அழைத்தீர்  
மறவாமல் நினைத்தீர் உம் மந்தையில் சேர்த்தீர் 
நான் தவறாமல் நடத்திவந்தீர்

பொல்லா உலகம் மேற்கொண்டிடாது
உம் பெலத்தால் இடைகட்டினீர்
மாயையாம் உலகில் மயங்கின வேளை
என் மனக்கண்கள் தெளிவாக்கினீர்

எண்ணில்லா நன்மை எனக்களித்தீர்
என்னையும் உயர்த்தி வைத்தீர்
வழுவாது காத்து பிள்ளையாய் சேர்த்து
வார்த்தையால் வழி காட்டினீர்

Rajaa um kangal ennai kaana
Enna nanmai en vaazhvil kandeer
Thallapatta ennai thalai kallaakka
Thaguthi enna en vaazhvil kandeer

Ellaam unga kirubai
Ellai illaa um kirubai

Thaayin karuvil uruvaakkineer
Peyar solli ennai azhaitheer
Maravaamal ninaitheer um manthaiyil sertheer
Naan thavaraamal nadaththi vantheer

Pollaa ulagam merkondidaathu
um belathaal idai kattineer
Maayayaam ulagil mayangina velai
En manakkangal thelivaakkineer

Ennillaa nanmai enakkalitheer
Ennaiyum uyarththi vaitheer
Vazhuvaathu kaaththu pillaiyaai serththu
Vaarthaiyaal vazhi kaattineer

Thursday, June 18, 2020

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Jeba aavi ennil oottum thaevaa

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா - Jeba aavi ennil oottum thaevaa
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்

அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்

இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும்

jeba aavi ennil oottum thaevaa
jeba sinthai ennil thaarum thaevaa

urangaatha kannkal vaenndum
unarvulla nenjam vaenndum
mutiyaatha kannnneer vaenndum
neerae ennai nadaththa vaenndum

araikkul kathavai pootti
tharaimattum ennai thaalththi
ithayaththai ummidam aenthi
jepikkinta varamae thaarum

iraakkaala tharisanam thaarum
athikaalai vilippaith thaarum
aaththuma paaram thaarum
thirappilae nirkavum vaenndum

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் - Vinnnnilum mannnnilum ummaiyallaamal

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் - Vinnnnilum mannnnilum ummaiyallaamal
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை –  நீ

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை

Vinnnnilum mannnnilum ummaiyallaamal
Aasaikal illaiyayyaa
Thannnneeraith thaedum maankal pola
Ummaiyae vaanjikkiraen

Aasaiyellaam neerthaanae
Vaanjaiyellaam neerthaanae

Ulakath thottam munnae
Ennaik kannteerayyaa
Um anpu aachcharyam
Um anpu athisayam
Um anpu uyarnthathayyaa – raajaa

Piranthanaal muthalaay paathukaaththeerayyaa
Maranthidavillai kaividavillai
Ennai vittu vilakavillai –  nee

Aayul kaalamellaam Yesuvae
Neer pothumae
Mannnnil vaalnthidum
Kaalangalellaam
Ummai marappathillai
Naan ummai pirivathillai

இதுவரை உதவின எபிநேசரே - Idhuvarai Udhavina Ebinesarae

இதுவரை உதவின எபிநேசரே - Idhuvarai Udhavina Ebinesarae
இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம்

தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே

செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே
மேகமாக முன் சென்றீரே
அக்கினியாய் துணை நின்றீரே

மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர்
தாகமெல்லாம் தீர்த்தீரய்யா
ஜீவத் தண்ணீர் தந்தீரய்யா

வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர்
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின்பற்றுவோம்

Idhuvarai Udhavina Ebinesarae
Inimelum Nadaththum Yegova Eerae 
Nandriudan Paadidivom 
Vaazhnaalellaam Pottriduvom 

Thalaimurai Thalaimuraiyaai
Engal Adaikkalam Aaneeraiya
Murpidhaakkal Aaradhiththa
Engal Parisuththa Deivam Neerae

Senkadal irandaai Pilandhavarae
Kottaigal Ellaam Udaiththavarae 
Megamaaga Mun Sendreerae
Akkiniyaai Thunai Nindreerae 

Maaraavin Thanneerai Kadakka Seidheer
Madhuramaam Neeroottrai Thandhu Vitteer
Thaagamellaam Theertheeraiyya
Jeeva Thanneer Thandheeraiya

Vaakkaliththa Desam Saerththiduveer
Vazhuvaamal Endrum Kaaththiduveer
Pattrikkolvom Ummai Endrum
Yesuvaiyae Pin Pattruvom

Wednesday, May 27, 2020

இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் - Yesuvin naamam en jeevanai kaakkum

இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் - Yesuvin naamam en jeevanai kaakkum
இயேசுவின் நாமம் என் ஜீவனைக் காக்கும் 
ஆட்டுக்குட்டி இரத்தம் என் வீட்டின் முத்திரை 

மறைந்து வரும் கொள்ளை நோய்களுக்கும் 
பயப்படேனே நான் பயப்படேனே

வியாதி பயம் மரண பயம் 
இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும் 

பொல்லாப்பு எனக்கு நேரிடாது 
வாதை என் கூடாரத்தை அணுகிடாது

பரலோக  சேனையின் காவலுண்டு
சர்வ வல்ல தேவனின் கிருபையுண்டு 

உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே  
மறந்திடுவோம் நோயின் பெயர்களையே

Yesuvin naamam en jeevanai kaakkum
aatu kutti raththam en veettin muththirai

marainthu varum kollai noikalukkum
bayappadene naan bayappadene

Viyaathi bayam marana bayam
iyaesuvin naamaththil vilagidattum

pollaappu enakku neridaathu
vaathai en koodaaraththai aNukidaathu

paraloga senaiyin kaavalundu
sarva valla devanin kirubai undu

uyarthiduvom yesuvin naamaththaiye
maranthiduvom noyin peyargalaiye

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் - Aaviyaanavare ummai vaanjikkiren

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் - Aaviyaanavare ummai vaanjikkiren
ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
உந்தன் மகிமையின் பிரசன்னம்
நிறைவாய் இறங்கட்டும் இந்த வேளையிலே

ஆவியிலே களிகூரவே என்றென்றும் விரும்புகிறேன்
வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே
நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன்
பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்ளுகிறேன்

தாவீது போல் மகிழ்ந்திடவே சமூகம் வேண்டுகிறேன்
ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திடுமே
உன்னதத்தில் உம்முடனே உறவாட உதவிடுமே
ஆவிக்குள்ளாய் அனுதினமும் அனல்வுணர்வூட்டிடுமே

மேல்வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே
ஆவிமழை கரைபுரள தேசத்தை சந்தியுமே
தேசமெல்லாம் அசைந்திடவே எழுப்பிடும் வாலிபரை
எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்ப்பிக்க செய்திடுமே

Aaviyaanavare ummai vaanjikkiren
unthan magimaiyin pirasannam 
niraivaai irangattum intha velaiyile

aaviyile kalikoorave entrentrum virunmbukiren
Vaanjikkiren ennaalume unthan samoogathaiye
Nesar mugam kaangayile aaviyil nirambukiren
paadi ummai thuthikkaiyile paravasam kollukiren

thaaveethu pol magizhnthidave samoogam vendukiren
aadipaadi thuthithidave viduthalai eenthidume
unnathaththil ummudane uravaada uthavidume
aavikkullaaai anuthinamum analvunarvoottidume

mel veettarai anubavathai entrentrum thanthidume
aavi mazhai karai purala thesaththai santhiyume
Thesamellaam asainthidave ezhumbidum vaalibarai
ezhupputhalaal puthu ullangal uyirpikka seithidume

Monday, March 30, 2020

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் - Enakothaasai varum parvatham nerai

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் - Enakothaasai varum parvatham nerai
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் 

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே 

என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே

வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் 

Enakothaasai varum parvatham nerai
En kangalai Yereduppen

Vaanamum boomiyum padaitha
Valla devanidamirunthu
Ennukkadangaa nanmaigal varume
En kangal yereduppen

Malaigal peyarnthagantidinum
Nilai maari puvi agantodinum
Maaridumo avar kirubai ennaalum
Aaruthal enakkavare

En kaalai thallaada vottaar
Ennai kaakkum devan urangaar
Isravelai kaakkum nal devan
Raappagal urangaare

Valappakkathil nizhal avare
Vazhuvaamal kaappavar avare
Sooriyan pagalil santhiran iravil 
Sethappaduthaathe

Eth theengum ennai anugaamal
Aathumaavai kaakkum en devan
Pokkaiyum varathaiyum pathiramaaga
Kaappaare ithumuthalaai

Friday, March 13, 2020

நீங்க செஞ்ச நன்மைகள நினைச்சு பார்க்குறேன் - Neenga Senja Nanmaigala Nenachu Paakkuren

நீங்க செஞ்ச நன்மைகள நினைச்சு பார்க்குறேன் - Neenga Senja Nanmaigala
Nenachu Paakkuren
நீங்க செஞ்ச நன்மைகள 
நினைச்சு பார்க்குறேன் 
தினம் தினம் நன்றி சொல்லி 
துதிச்சு மகிழுறேன் 

புழுதியில் புரண்ட என்னை 
குப்பையில் கிடந்த என்னை 
கன்மலை மேல் உயர்த்தி வச்ச 
உம்மை உயர்த்துவேன் 

நன்றி ஐயா நன்றி ஐயா 
நாளெல்லாம் உமக்கே நன்றி ஐயா 

என் கருவை உம் கண்கள் கண்டதினாலே 
உம கரங்கள் என் வாழ்வை தொட்டத்தினாலே 
ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே 
உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டீரே 

Neenga Senja Nanmaigala Nenachu Paakkuren Dhinam Dhinam Nandri Solli Thudhichi Magizhuren Puzhudhiyil Puranda Ennai Kuppaiyil Kidandha Ennai Kanmalai Mel Uyarthi Vacha Umma Uyarthuven Nandri Ayya Nandri Ayya Nallellam Umakkae Nandri Ayya En Karuvai Um Kangal Kandadhinalae Um Karangal En Vazhvai Thottadhinalae Ondrukkum Udhavadha Ennai Thedi Vandheerae Umadhu Sevaikkaga Ennai Therindhu Kondirae

இயேசு நாமம் மேலான நாமம் - Yesu naamam Melaana naamam

இயேசு நாமம் மேலான நாமம் - Yesu naamam Melaana naamam
இயேசு நாமம் மேலான நாமம் 
எல்லா நாமத்திலும் மேலானதே 
இயேசுவே உம நாமமே 
மேலானதே மேலானதே -2

பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே 
சாபம் மாற்றும் சர்வ வல்ல நாமம் இதே 
எனக்காகவே சிலுவையில் 
ஜீவன் தந்த நாமமே 

சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே 
சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே 
முழங்கால்கள் முடங்கிடும் 
நாவு யாவும் போற்றிடும் 

Yesu naamam Melaana naamam
Ellaa naamaththilum melaanathe
Yesuve um naamame
Melaanathe melaanathe -2

paavam pokkum parisuththa naamam ithe
Saabam maatrum sarva valla naamam ithe
enakkaaga siluvaiyil 
Jeevan thantha naamame

Seraabeengal potridum parisuththare
Senaigalin karthar neere parisuthare
Muzhangaalgal mudangidum
Naavu yaavum potridum

Saturday, March 7, 2020

என் கூடவே இரும் ஓ இயேசுவே - En Koodave Irum Ooo Yesuae

என் கூடவே இரும் ஓ இயேசுவே - En Koodave Irum Ooo Yesuae
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது 
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே 
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே 
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2)

கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே 
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2)

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே 
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2)

En Koodave Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu
En Pakathilae Irum Ooo Yesuae
Neer Ilamal Naan Vazha Mudiyathu – 2

Iruzhana Vazhkaiyele Velicham Aanirae
Uyiratra Vazhkaiyele Jeevan Aanirae -2
En Velichan Neerae En Jeevanum Neerae – 2
Enakellame Neenga Than Appa

Kaneer Sinthum Nerathil Neer Thayumanirae
Kaayapatta Naerathil Neer Thagapananirae – 2
En Ammavum Neerae En Appavum Neerae – 2
Enakellame Neenga Than Appa

Vyatheyin Neratil Vaithyaraneerae
Sodhani Nerathil Nanbananeerae – 2
En Vaithiyar Neerae En Nanbarum Neerae – 2
Enakellame Neega Than Appa

Sunday, March 1, 2020

மலைகள் விலகிப்போனாலும் - Malaigal vilagi ponaalum

மலைகள் விலகிப்போனாலும் - Malaigal vilagi ponaalum
மலைகள் விலகிப்போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனது 

அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே

என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சினேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் 
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

யெகோவா நிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
என் வாழ்வில் நம்பிக்கையானவர் 
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

யெகோவா ராப்பா எந்தன் சுகமாணவர்
யெகோவா ரூவா எந்தன் மேய்பப்பரானவர்
வழுவாமல் என்னை என்றும் காப்பவர் 
என் வாழ்வில் என்றும் போதுமானவர்

Malaigal vilagi ponaalum
Parvathangal peyarnthu ponaalum
Avar kirubai avar irakkam
Maaraathu enthan vaazhvile

Ennai vittu vilagaatha aandavar
Ennai prupothum kaividaatha snegithar
Enakkaaga jeevan thantha ratchagar
En vaazhvil entrum pothumaanavar

Yehova nissi enthan jeyamaanavar
Yehova shamma ennodu iruppavar
En vaazhvil nambikkaiyaanavar
En vaazhvil entrum pothumaanavar

yehova rapha enthan sugamaanavar
Yehova roova enthan meipanraanavar
Vazhuvaamal ennai entrum kaappavar
En vaazhvil entrum pothumaanavar