Search a song (Type in tamil for better results)

Thursday, January 11, 2018

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே - Ganathirkkum magimaikkum paathirarae

கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா  - உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை

இரண்டு மூன்று  பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருக்கிறேன் என்றீரே  - என் துதியில்  வாழ்பவரே

அநேக ஸ்தோத்திரத்தால் உம் கிருபை  பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது  உங்க மகிமை விளங்குதப்பா

உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்துடுவீர் எங்களை ஆசீர்வதித்திடுவீர்  

No comments:

Post a Comment